நியூயார்க் நகரின் மீது படையெடுத்த பூச்சிகள் கூட்டம் - பொதுமக்கள் அவதி


நியூயார்க் நகரின் மீது படையெடுத்த பூச்சிகள் கூட்டம் - பொதுமக்கள் அவதி
x

நியூயார்க் நகர சுரங்கப்பாதைகளிலும் பூச்சிகளின் கூட்டம் ஊடுருவியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகர குடியிருப்புவாசிகளை அளவில் மிகச்சிறிய பூச்சிகளின் கூட்டம் திண்டாட வைத்திருக்கிறது. சுமார் மூன்று நாட்களாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் பகுதிகளை சுற்றி பெருமளவில் தோன்றிய இந்த சிறிய பூச்சிகள் சாலையில் செல்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இடையூறாக இருக்கின்றன.

நியூயார்க் நகர சுரங்கப்பாதைகளிலும் இந்த பூச்சிகள் கூட்டம் ஊடுருவியுள்ளது. இது குறித்து சிட்டி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநரான பேராசிரியர் டேவிட் லோமன், 'இந்த பூச்சிகள், சிறகுகள் கொண்ட அஃபிட்ஸ் (aphids) வகை பூச்சி என்றும், அவை க்னாட்ஸ் (gnats- ஒருவகை கொசு) அல்ல' என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த திடீர் அஃபிட்ஸ் தாக்குதல் அபூர்வமானது என்றாலும், இது வானிலை மாற்றத்தின் விளைவு என்று புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கோரி மோரோ கூறியிருக்கிறார்.

இந்த பூச்சிகளால் பொது சுகாதார அபாயம் எதுவுமில்லை என்று நியூயார்க் நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், ஏதேனும் முக்கியமான சுகாதார தகவலிருந்தால் அதனை பகிர்ந்து கொள்வோம் நியூயார்க் நகர சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story