"அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு" - அமெரிக்க முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாகி கருத்து
ரஷியா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என ஜேமி டைமன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் அடுத்து வரும் 6 முதல் 9 மாதங்கள் வரை பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என அந்நாட்டின் முதன்மை முதலீட்டு வங்கி நிறுவனமான ஜே.பி.மார்கன் சேஸ்-இன் தலைமை நிர்வாகி ஜேமி டைமன் எச்சரித்துள்ளார்.
இது கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட அவ்வளவு மோசமாக இருக்காது என்றாலும், கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், வட்டி விகித உயர்வு, ரஷியா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
இந்த பொருளாதார மந்தநிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியாது என்றும், இதற்கான முன்னெச்சரிக்கையாக சந்தை விலைகளை மதிப்பிடு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story