ஆப்கானிஸ்தானில் இயற்கை பேரிடரால் ஆயிரம் பேர் பலி; 2 ஆயிரம் பேர் காயம் என தகவல்


ஆப்கானிஸ்தானில் இயற்கை பேரிடரால் ஆயிரம் பேர் பலி; 2 ஆயிரம் பேர் காயம் என தகவல்
x

ஆப்கானிஸ்தான் நாட்டில் இயற்கை பேரிடரால் ஆயிரம் பேர் பலியாகியும், 2 ஆயிரம் பேர் காயம் அடைந்தும் உள்ளனர்.



காபூல்,


ஆப்கானிஸ்தான் நாட்டில் இயற்கை பேரிடர்களான வெள்ளம், நிலநடுக்கம், பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள் மற்றும் வறட்சி ஆகியவற்றால் பாதுகாப்பற்ற நிலை மற்றும் வறுமை ஏற்பட்டு நிலைமையை மோசமடைய செய்கிறது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், அந்த நாட்டில் தலீபான் தலைமையிலான பேரிடர் அமைச்சக அதிகாரி ஒருவர் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டில் இயற்கை பேரிடரால் ஆயிரம் பேர் பலியாகியும், 2 ஆயிரம் பேர் காயம் அடைந்தும் உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, 1980-ம் ஆண்டில் இருந்து இயற்கை பேரிடரால் ஏற்படும் தீங்குகளால் 90 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். நாட்டில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் கடும் குளிரால் 70 பேர் உயிரிழந்து உள்ளனர். 70 ஆயிரம் கால்நடைகள் அழிந்து போய் விட்டன. 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 180-க்கும் மேற்பட்டோரும், ஜூனில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புக்கு குறைந்தது ஆயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். 1,500 பேர் காயமடைந்து உள்ளனர் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story