தலீபான்கள் ஆட்சிக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் ஆப்கானியர்கள்
தலீபான்கள் ஆட்சிக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் ஆப்கானியர்கள் சிறப்பு விசாவை பெற காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. அதுமுதல் அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இதற்கிடையே போர் முயற்சிகளுக்கு உதவிய மக்கள் அமெரிக்காவில் குடியேறும் வகையில் சிறப்பு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009-ம் ஆண்டிலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தலீபான்கள் ஆட்சிக்கு பிறகு இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் அந்த சிறப்பு விசாவை பெற காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story