பாகிஸ்தானில் கார் மீது வெடிகுண்டு வீசி 7 பேர் படுகொலை


பாகிஸ்தானில் கார் மீது வெடிகுண்டு வீசி 7 பேர் படுகொலை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 9 Aug 2023 1:28 AM IST (Updated: 9 Aug 2023 2:10 PM IST)
t-max-icont-min-icon

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இதில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு வந்திருந்தவர்களில் சிலர் தங்களது காரில் புறப்பட்டனர். அப்போது அந்த பகுதி கவுன்சிலர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

இதில் கார் வெடித்து சிதறியதில் 7 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டனர். சிலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


Next Story