வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 6.3 ரிக்டராக பதிவு


earthquake in Vanuatu
x

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வனுவாட்டு தீவு முழுவதும் அதிர்ந்தது. சுனாமி ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஓல்ரி துறைமுகத்தில் இருந்து 51 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 156.7 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தீவு முழுவதும் அதிர்ந்தது. சுனாமி ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகவில்லை.

பசிபிக் தீவு நாடுகளான பிஜி, டோங்கா மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகள், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளன.


Next Story