ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்- மக்கள் பீதி


ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்- மக்கள் பீதி
x

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 241 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களும் அதிர்ந்தன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது.

காஷ்மீரிலும், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் நிலஅதிர்வை உணர்ந்தனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.51 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.


Next Story