மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து... கடற்படை வீரர்கள் 3 பேர் பலி


மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து... கடற்படை வீரர்கள் 3 பேர் பலி
x

போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ கடற்படை வீரர்கள் நேற்று, பாந்தர் ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். மெக்சிகோ வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து கப்பலில் இருந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டரில் 8 பேர் பயணித்தனர். இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இத்தகவலை மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் கடற்படை கூறியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.


Next Story