பாகிஸ்தான்: ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 23 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் ராணுவ தளம் உள்ளது.
லாகூர்,
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் இன்று அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாலை நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானி தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Related Tags :
Next Story