ஈராக்கை தாக்கிய புழுதி புயல் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
ஈராக்கில் புழுதி புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாக்தாத்,
உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வெப்பத்தின் அளவு புதிய உச்சம் தொட்டு வருகிறது. வெப்பத்துடன் சேர்த்து புழுதி காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உள்பட 18 மாகாணங்களில் நேற்று திடீரென புழுதி புயல் வீசியது. இதனால், வானம் முழுவதும் தூசி, மண்ணால் சூழ்ந்தது.
குறிப்பாக அந்நாட்டின் அன்பர் மாகாணத்தில் புழுதி புயலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. புழுதி புயலால் சாலைகள், வீதிகளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மண், தூசி சூழ்ந்தது. இதனால், பலருக்கும் மூச்சுத்திணறல் உள்பட சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஈராக்கில் கடந்த மாதத்தில் மட்டும் 7 முறை புழுதி புயல் தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story