போலந்து நாட்டில் உக்ரைன் மந்திரிகளுடன் ஜோ பைடன் சந்திப்பு
போலந்து நாட்டில் உக்ரைனின் வெளியுறவு மந்திரி, ராணுவ மந்திரி மற்றும் அமெரிக்க துருப்புகளையும் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார்.
உக்ரைன் போருக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போலந்து நாட்டுக்கு வந்தார். அங்குள்ள வார்சா நகரில் அவரை நேற்று உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவும், ராணுவ மந்திரி ஒலெக்சி ரேஸ்னிகோவும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் உக்ரைன் போரின் தற்போதைய நிலைமை குறித்து ஜோ பைடனிடம் விளக்கி கூறினார்கள்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனும், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினும் உடன் இருந்தனர். போலந்தில் உள்ள அமெரிக்க துருப்புகளையும் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களுடன் ‘பிட்ஸா’வை பகிர்ந்து சாப்பிட்டார். இது அமெரிக்க துருப்புகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story