பெலாரஸ் அதிபர், குடும்பத்தினர் மீது பொருளாதார தடை - ஆஸ்திரேலியா நடவடிக்கை


பெலாரஸ் அதிபர், குடும்பத்தினர் மீது பொருளாதார தடை - ஆஸ்திரேலியா நடவடிக்கை
x
தினத்தந்தி 25 March 2022 7:48 PM GMT (Updated: 25 March 2022 7:48 PM GMT)

ரஷியாவுக்கான ஆதரவை தொடர்ந்து வரும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

கான்பெர்ரா,

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு பெலாரஸ் நாடு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சர்வதேச நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. 

இந்த நிலையில் ரஷியாவுக்கான ஆதரவை தொடர்ந்து வரும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீது ஆஸ்திரேலிய அரசு தடை விதிக்கிறது. அதே போல் அவரது மனைவி கலினா லுகாஷென்கோ மற்றும் பெலாரஸ் அரசாங்கத்தில் மூத்த தேசிய பாதுகாப்புப் பொறுப்புகளை வகித்த அவரது மகன் விக்டர் லுகாஷென்கோ மீதும் நாங்கள் தடைகளை விதிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. இதுதவிர ரஷியாவை சேர்ந்த 26 தனிநபர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story