உக்ரைனுக்கு ஆயுதம் தர முடியாது - ஹங்கேரி பிரதமர் திட்டவட்டம்


உக்ரைனுக்கு ஆயுதம் தர முடியாது - ஹங்கேரி பிரதமர் திட்டவட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 12:49 AM IST (Updated: 26 March 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனுக்கு ஆயுதம் தர முடியாது என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புடாபெஸ்ட்,

ரஷியாவை எதிர்த்து சண்டையிட ஆயுதங்கள் வழங்க வேண்டும், கூடவே ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடான ஹங்கேரிக்கு உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது வேண்டுகோளை ஏற்க அந்த நாடு மறுத்து விட்டது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் நேற்று சமூக ஊடகம் ஒன்றில் வீடியோ பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “ உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் வேண்டுகோள்கள், ஹங்கேரியின் நலன்களுக்கு எதிரானவை. ரஷிய எரிசக்திக்கு தடை போட்டால் அது எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மந்தமாக்கும்” என கூறி உள்ளார். உக்ரைன் எல்லையில் உள்ள ஹங்கேரி, அந்த நாட்டுக்கு போரிட ஆயுதங்கள் தர மறுத்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story