உண்மையான அச்சுறுத்தல் இனிமேல் தான்; இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தலாம் - ஜோ பைடன் எச்சரிக்கை


உண்மையான அச்சுறுத்தல் இனிமேல் தான்; இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தலாம் - ஜோ பைடன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 March 2022 3:13 PM GMT (Updated: 23 March 2022 3:13 PM GMT)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.அங்கு உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பைடன் கூறியதாவது, “உக்ரைன் மீது ரஷியா இரசாயன ஆயுத தாக்குதலை தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இது உண்மையான அச்சுறுத்தலாக அமையும்.

இப்போது ஏற்பட்டுள்ள தளவாட சிக்கல்கள் மற்றும் உக்ரேனிய படைகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ரஷியா இரசாயன அல்லது அணு ஆயுதங்களை அதன் படையெடுப்பு நிறுத்தங்களாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

நாளை நடைபெறும் பிற நாட்டு தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் பற்றி விரிவாக பேச உள்ளேன்” என்றார்.

முதலில் அவர், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ அமைப்பின் அவசரகால உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். அதனை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் கூட்டங்களிலும், உலகின் 7 பணக்கார  குடியரசு நாடுகளின் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார்.
 
அதனை தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமையன்று உக்ரனின் அண்டை நாடான போலாந்தின் வார்சா நகருக்கு அவர் செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story