இந்தியாவுக்கான புதிய நேபாள தூதராக ஷங்கர் பிரசாத் சர்மா நியமனம்..!


இந்தியாவுக்கான புதிய நேபாள தூதராக ஷங்கர் பிரசாத் சர்மா நியமனம்..!
x
தினத்தந்தி 20 March 2022 10:07 PM IST (Updated: 20 March 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கான புதிய நேபாள தூதராக ஷங்கர் பிரசாத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்மாண்டு,

இந்தியாவுக்கான நேபாள தூதராக நியமிக்கப்பட்டிருந்த நீலாம்பர் ஆச்சார்யா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்ப அழைக்கப்பட்டதையடுத்து, புதுடெல்லியில் உள்ள நேபாளத்தின் தூதர் பதவி காலியாக இருந்தது. 

இந்த நிலையில் இந்தியாவுக்கான நேபாளத்தின் புதிய தூதராக பொருளாதார நிபுணர் டாக்டர் ஷங்கர் பிரசாத் சர்மாவை அந்நாட்டு ஜனாதிபதி பித்ய தேவி பண்டாரி நியமித்துள்ளார்.

நேபாள அரசியலமைப்பு சட்டம் 282-வது பிரிவின்படி அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி பண்டாரியால் இந்தியாவுக்கான நேபாள தூதராக ஷங்கர் பிரசாத் சர்மா நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஷங்கர் பிரசாத் சர்மா இதற்கு முன்பு அமெரிக்காவுக்கான நேபாள தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story