ரஷியாவுக்கு எதிராக விசாரணைக் குழு- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முடிவு
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக் குழுவை அமைக்கவுள்ளது.
நியூயார்க்,
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷி யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும், உக்ரைன் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் உள்ளது.
ஏற்கனவே உக்ரைனின் கெர்சன், எனர்கோடர் நகரங்களை தொடர்ந்து மிக்கலேவ் நகரை ரஷியா கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக் குழுவை அமைக்கவுள்ளது. இது குறித்து நடந்த வாக்கெடுப்பின் முடிவில் இந்த முடிவை மனித உரிமைகள் ஆணையம் எடுத்துள்ளது.
32 நாட்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் ரஷியா மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 13 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.17 நாடுகள் விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றபட்டது
இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் அத்துமீறல்கள் காரணமாக மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது" என தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story