தம்பி 3 லட்டு திங்க ஆசையா...! ஒரே நேரத்தில் 3 சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட வாலிபர்


தம்பி 3 லட்டு திங்க ஆசையா...! ஒரே நேரத்தில் 3 சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட வாலிபர்
x
தினத்தந்தி 4 March 2022 11:42 AM (Updated: 4 March 2022 11:42 AM)
t-max-icont-min-icon

காங்கோ ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது.

காங்கோ

காங்கோ நாட்டின்  கிழக்குப் பகுதியில் உள்ள தெற்கு கிவுவை சேர்ந்தவர்  லுவிசோ என்ற வாலிபர் . ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார். அந்த நாட்டில்  ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. ருவாண்டாவின் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு கிவுவில் அமைந்துள்ள கலேஹேவில் திருமணம் நடைபெற்றது.

லுவிசோ நடாஷா, நடாலி மற்றும் நடேஜ்  ஆகிய சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்கிறாயா என் முன்மொழிந்தபோது அவர் மகிழ்ச்சியுடன் ஆம் என்று கூறினார்.

ஆனால் மூன்று சகோதரிகளை  திருமணம் செய்துகொள்ளும் அவரது முடிவை அவரது பெற்றோர்களால்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  அதனால் அவர்கள்  திருமணத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

அவரது பெற்றோர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மணமகன் லூசோ கூறியதாவது:-

நான் கனவு கண்டது போல் தெரிகிறது!நான் முதலில் நடாலியை காதலித்தேன். அதன் பிறகுதான் அவரது 2 சகோதரிகளை சந்தித்தேன். அவர்கள் சகோதரிகள்  என்பதால் அனைவரையும் திருமணம் செய்ய நான் சம்மதித்தேன். இது எளிதான முடிவு அல்ல, ஏனென்றால் நான் என்ன செய்கிறேன் என்று என் பெற்றோருக்கு இது வரை புரியவில்லை .

கூடுதலாக ஒன்றைப் பெற நீங்கள் எதையாவது ஒன்றை இழக்க வேண்டும்.  ஒவ்வொருவருக்கும்  அவரவர் விருப்பங்கள் மற்றும் விஷயங்களைச் செய்வதற்கான அவரவர் தனிவழி உள்ளது.

மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. மூன்று சகோதரிகளை திருமணம் செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் பெற்றோர் என் முடிவை வெறுத்தார்கள் அதனால் தான் அவர்கள் என் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காதலுக்கு எல்லை இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும்,என்று அவர்  கூறினார்.

Next Story