பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்


பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்
x
தினத்தந்தி 2 March 2022 5:48 AM IST (Updated: 2 March 2022 5:48 AM IST)
t-max-icont-min-icon

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

லிஸ்பன்,

ஜெர்மனி நாட்டில் இருந்து 4 ஆயிரத்திற்கும் அதிகமான சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்கா நோக்கி கடந்த மாதம் சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெண்ட்லிஸ், புரொஷீஸ், பென்ஸ், லம்போகினி, வெல்ஸ்வாகன் உள்பட நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் கொண்டு செல்லப்பட்டன.

அட்லாண்டிக் கடலில் போர்சீகல் நாட்டின் அசொரிஸ் தீவு பகுதி அருகே கடந்த 16-ம் தேதி சென்றபொது கப்பலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த போர்சீகல் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், கப்பலில் சிக்கிய குழுவினர் 16 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், சரக்கு கப்பலில் தீ மளமளவென பரவியது. தீயை அணைக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தது. ஆனால், கப்பலில் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில், தீ பற்றிய சரக்கு கப்பல் தற்போது அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ளது. இதனால், சரக்கு கப்பலில் இருந்த 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ளன. கடலின் அடியில் 3.5 கிலோ மீட்டர் ஆழத்தில் சரக்கு கப்பல் மூழ்கியுள்ளது. சரக்கு கப்பலில் இருந்து இதுவரை எரிபொருள் கசிவு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் சரக்கு கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story