புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா
சீனா தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
விண்வெளி ஆய்வில் அமெரிக்காவை முந்த வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வரும் சீனா, தொடர்ச்சியாக பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
அந்த நாட்டின் வட பகுதியில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து காபென்-11-03 என்ற அந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-4 பி கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு மற்றும் பேரழிவு தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story