ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றினர்
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரான மசார்-இ-ஷெரீப் மீது தலிபான்கள் இன்று அதிகாலை முதல் தாக்குதலை தொடங்கி உள்ளனர்.
காபூல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு தெற்கே லோகர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.
லோகரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹோமா அஹ்மதி கூறும் போது தலிபான்கள் அதன் தலைநகரம் உள்பட முழு மாகாணத்தையும் கட்டுப்படுத்தி உள்ளனர். காபூல் மாகாணத்தில் இன்று அவர்கள் ஒரு மாவட்டத்தை கைப்பற்றினர் என கூறினார்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரான மசார்-இ-ஷெரீப் மீது தலிபான்கள் இன்று அதிகாலை முதல் தாக்குதலை தொடங்கி உள்ளனர்.
வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் முனீர் அஹ்மத் பர்ஹாத் கூறும்போது தலிபான்கள் நகரின் பல பகுதிகளில் இருந்து தாக்குதலை நடத்தினர். உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை என கூறினார்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி மசார்-இ-ஷெரீப்புக்கு நகரின் பாதுகாப்பை மேற்கொள்ள அங்கு சென்றார், அரசுடன் கூட்டணி அமைத்த பல இராணுவ தளபதிகளை அவர் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிட தக்கது.
தலிபான்கள் தற்போது தலைநகர் காபூலுக்கு தெற்கே 80 கிமீ (50 மைல்) அளவில் உள்ளனர்.
Related Tags :
Next Story