அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை


அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை
x
தினத்தந்தி 25 July 2021 5:44 AM IST (Updated: 25 July 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே, கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும், சுமுகமான நிலையில் இல்லை. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை, சீனா, கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடைகளை விதித்து. மேலும் ஹாங்காங்கில் வணிகம் செய்வதில் உள்ள அபாயங்கள் குறித்து தனது வணிக சமூகத்துக்கு அமெரிக்கா எச்சரித்தது. இதனை சீனா வன்மையாக கண்டித்தது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதார தடைகள் ஹாங்காங்கின் வணிக சூழலை ஆதாரமற்ற முறையில் அழிக்க வடிவமைக்கப்பட்டவை ஆகும். மேலும் அவை சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவுகளில் நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள் கடுமையாக மீறுகின்றன’’ என கூறப்பட்டது. இந்தநிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடையை விதித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி 
காலத்தில் அமெரிக்காவின் வர்த்தக மந்திரியாக இருந்த வில்பர் ரோஸ் உள்பட 7 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்ததாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Next Story