அமெரிக்காவில் ‘டிக்டாக்’ நட்சத்திரம் படுகொலை

அமெரிக்காவில் டெலவாரே மாகாணத்தில் வசித்து வந்தவர், சுவாவி (வயது 19). டிக்டாக் நட்சத்திரம். நடனக் கலைஞரான இவரை டிக்டாக்கில் 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர். இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்தனர்.
இவரது சில வீடியோக்கள் 10 கோடிக்கும் மேலாக ‘லைக்’குகளை அள்ளியது. சமீபத்திய அவரது வீடியோவை 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த நிலையில், அவர் சுடப்பட்டார். படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவரது இயற்பெயர் மதிமா மில்லர் ஆகும். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை வில்மிங்டன் நகர போலீசார் உடனடியாக வெளியிடவில்லை.
அதே நேரத்தில் அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “சுவாவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கச்செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதால், கூடுதல் தகவல்களை இப்போது பகிர முடியாது ” என கூறி உள்ளனர். இது ஒரு தொடக்கம்தான், நாங்கள் எப்போதும் அவரது பெயரை நினைவில் வைத்திருப்போம், அவரது பாரம்பரியத்தைத் தொடர்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அவரது ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு டிக்டாக் நட்சத்திரமான டாமரி மிகுலா, யூ டியூப்பில் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உங்கள் பாரம்பரியத்தைத் தொடர்வோம். உங்கள் பெயரை என்றும் அறியச்செய்வோம். நீங்கள் மிகவும் அப்பாவி” என உருகி உள்ளார்.
Related Tags :
Next Story