2021 புத்தாண்டை உற்சாகத்துடன் முழக்கமிட்டு வரவேற்ற ஹாங்காங் மக்கள்


2021 புத்தாண்டை உற்சாகத்துடன் முழக்கமிட்டு வரவேற்ற ஹாங்காங் மக்கள்
x
தினத்தந்தி 31 Dec 2020 4:56 PM (Updated: 31 Dec 2020 4:56 PM)
t-max-icont-min-icon

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டை ஹாங்காங் மக்களும் உற்சாகத்துடன் முழக்கமிட்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து நாட்டில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கும், ஆஸ்திரேலியாவில் 6.30 மணியளவிலும் புத்தாண்டு பிறந்தது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் இந்திய நேரப்படி 9.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

அதேபோல் தைவான் மற்றும் வடகொரியா நாட்டிலும் புத்தாண்டு பிறந்ததை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாக முழக்கமிட்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மத்தியில் சாலைகளில் குவிந்த மக்கள் உற்சாகமாக முழக்கமிட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வான வேடிக்கைகள் கண்களைக் கவரும் வகையில் அமைந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது.

Next Story