உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5.23 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனாவில் இருந்து 5 கோடியே 23 லட்சத்து 54 ஆயிரத்து 507 பேர் மீண்டுள்ளனர்.
ஜெனீவா,
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,
உலகில் கொரோனாவால் 7 கோடியே 45 லட்சத்து 14 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்து 54 ஆயிரத்து 349 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 23 லட்சத்து 54 ஆயிரத்து 507 பேர் மீண்டனர். தற்போது உலகம் முழுவதும் 2,05,17,499 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி அறிய உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச குழு ஓராண்டுக்கு பிறகு விசாரணைக்காக சீனா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story