ஆப்கானிஸ்தானில் 15 கண்ணிவெடிகள் அழிப்பு: 90 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் 90 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
கந்தஹார்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கந்தஹார் மாகாணத்தின் பஞ்ஜ்வாய், ஜாரி, ஆர்பான்தப் மற்றும் மைவாண்ட் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதலை தொடுத்தனர்.
இந்த மோதலில் 90 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். 9 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
வாகனங்களை இலக்காக கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் 15 கண்ணிவெடிகளை ராணுவத்தினர் கண்டறிந்து அவற்றை செயலிழக்க செய்துள்ளனர். தலீபான் பயங்கரவாதிகளின் ஆயுத குவியல்களையும் வீரர்கள் அழித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தலீபான் பயங்கரவாத அமைப்பு, கந்தஹாரில் எந்தவித மோதலிலும் நாங்கள் ஈடுபடவில்லை. யாரும் எங்களது தரப்பில் உயிரிழக்கவில்லை என தெரிவித்து உள்ளது.
இருந்தபோதிலும், அரசு அறிவித்துள்ள இந்த எண்ணிக்கையானது உண்மையில் மிக அதிகம். நம்பிக்கையிழந்த தங்களுடைய வீரர்களுக்கு பொய்யான உறுதிமொழிகளை கொடுக்கும் யுக்திகளில் ஒரு பகுதியாக இதுபோன்ற செய்தி குறிப்புகளை ஆப்கான் ராணுவம் வெளியிடுகிறது என்றும் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story