நான் அதிபராக விரும்புகிறேன்; கமலா ஹாரீசின் பேத்தி கூறும் வீடியோ வைரல்


நான் அதிபராக விரும்புகிறேன்; கமலா ஹாரீசின் பேத்தி கூறும் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 7 Nov 2020 10:09 PM IST (Updated: 7 Nov 2020 10:09 PM IST)
t-max-icont-min-icon

நான் அதிபராக விரும்புகிறேன் என துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீசிடம் அவரது பேத்தி கூறும் காட்சி வைரலாகி வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ந்தேதி நடைபெற்றது.  இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.  அதன் முடிவுகள் அறிவிப்பில் இழுபறி நீடித்து வருகிறது.

ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாயார் இந்தியர் ஆவார்.  கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனராலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரீஸ் தான் ஆவார்.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தென் ஆசிய பாரம்பரியத்தை கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.  இந்நிலையில், கருப்பு வண்ண முக கவசம் அணிந்தபடி இருக்கும் கமலா ஹாரீசிடம், அவருடைய மடியில் அமர்ந்தபடி, அவரது பேத்தி நான் அதிபராக விரும்புகிறேன் என கூறுகிறார்.

அதற்கு கமலா தலையசைத்தபடி, நீயும் அதிபராகலாம்.  ஆனால், அதற்கு உனக்கு 35 வயது ஆக வேண்டும்.  இப்பொழுது ஆக முடியாது என கூறுகிறார்.  12 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

Next Story