ஜப்பான் தீவுக்குள் அத்துமீறி நுழைந்த சீன கப்பல்கள் - ஜப்பான் கடும் கண்டனம்


ஜப்பான் தீவுக்குள் அத்துமீறி நுழைந்த சீன கப்பல்கள் - ஜப்பான் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 14 Oct 2020 5:20 PM IST (Updated: 14 Oct 2020 5:20 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பான் தீவுக்குள் அத்துமீறி சீன கப்பல்கள் நுழைந்ததற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ, 

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.

இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கிழக்கு சீனக்கடலில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள சென்ககு தீவையும் சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன கடலோர காவல்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் சர்ச்சைக்குரிய சென்ககு தீவுக்குள் அத்துமீறி நுழைந்தன. ஜப்பான் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும் சீனாவின் 2 கப்பல்களும் இன்னுமும் அங்கேயே உள்ளன.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் கட்சுனோபு கட்டோ கூறுகையில், “2 சீன கடலோர காவல்படை கப்பல்கள் இன்னும் ஜப்பானிய கடலில் உள்ளன என்பது மிகவும் வருந்தத்தக்கது. இந்தப் பிரச்சினையில் ஜப்பான் சீனாவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது. சீன கப்பல்கள் உடனடியாக ஜப்பானிய கடலில் இருந்து வெளியேற வேண்டும். ஜப்பான் தனது பிராந்திய நீர், நிலம் மற்றும் வான்வெளியை அவசர உணர்வோடு உறுதியாக பாதுகாக்கும்” என்றார்.

Next Story