கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பலன் அளிக்கின்றனவா? ஆய்வு முடிவுகள்
கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பலன் அளிக்கின்றனவா என்பது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
லண்டன்,
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத்தொடங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில் பிற நோய்களுக்கு தரப்படுகிற சில மருந்துகளை சோதனை ரீதியில் கொரோனா நோயாளிகளுக்கு உலகமெங்கும் தருகின்றனர். அந்த மருந்துகள் எந்தளவுக்கு பலன் தருகின்றன என்பது பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அது தொடர்பான ஒரு பார்வைதான் இது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான இங்கிலாந்து ஆய்வுக்குழுவினர், வீக்கத்தை குறைப்பதற்காக பரவலாக பயன்படுத்தப்படுகிற ஒரு வகை ஸ்டீராய்டு மருந்தான டெக்சாமெதாசோன் பற்றி ஆராய்ந்துள்ளனர். 2,104 நோயாளிகளுக்கு இந்த மருந்து அளிக்கப்பட்டு, வழக்கமான கவனிப்புகளை பெறும் 4,321 நோயாளிகளுடன் ஒப்பிடப்பட்டது. சுவாச எந்திரங்கள் தேவைப்படுகிற நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளில் இந்த மருந்து இறப்புகளை 36 சதவீதம் குறைத்துள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 29 சதவீதத்தினரும், வழக்கமான கவனிப்புகளை சந்தித்தவர்களில் 41 சதவீதத்தினரும் இறந்துள்ளனர். ஆக்சிஜன் தேவைப்பட்ட நோயாளிகளில் இறப்பு வீதத்தை 18 சதவீதம் குறைத்துள்ளது.
ஆனால் ஆரம்ப கட்ட நோயாளிகளில் இது தீங்கு விளைவிப்பதாக தோன்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து எடுத்து 18 சதவீதத்தினர் இறந்தனர். வழக்கமான பிற கவனிப்பில் 14 சதவீதத்தினர் மட்டுமே இறந்துள்ளனர்.
யார் நன்மை அடைகிறார்கள், யார் பயன் அடைவதில்லை என்ற தெளிவு, அனேகமாக பல உயிர்களை காப்பாற்றும் என்று ஆய்வினை டாக்டர் அந்தோணி பாசியும், லேனும் கூறி உள்ளனர்.
அதே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்னும் மலேரியா மருந்து பயன்பாடு, கடுமையான முறையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், இந்த மருந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவவில்லை தெரிய வந்தது.
28 நாட்களுக்கு பின்னர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களில்25.7 சதவீதத்தினர் இறந்திருக்கிறார்கள். வழக்கமான கவனிப்பில் 23.5 சதவீதத்தினர் இறந்துள்ளனர். இதில் வித்தியாசம் சிறிதளவே உள்ளது.
ஆனால் தற்போதைய ஆராய்ச்சியில் இந்த மருந்து தீங்கு விளைவிப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொடுக்கப்பட்ட நோயாளிகள் 28 நாட்களுக்குள் ஆஸ்பத்திரியில் இருந்து உயிருடன் செல்வது குறைவு என தெரிய வந்துள்ளது. சுவாச எந்திரங்கள் தேவைப்படாதோரிலும், சிகிச்சையை தொடங்கி ஒன்றிரண்டு பேர் இறக்க வாய்ப்பு உள்ளதாம்.
வேறு இரு சோதனைகளில், புற நோயாளிகளை பொறுத்தவரையில் இந்த மருந்து ஆரம்ப கட்டத்தில் உதவுவதில்லை என தெரியவந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 293 பேரை ஆராய்ந்ததில், வைரஸ் நோயாளிகளின் அளவை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை. உடல்நிலை மோசமாகி, ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை உருவாகும் ஆபத்து இருப்பதுவும் தெரிய வந்துள்ளது.
மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 423 மிதமான நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் தரப்பட்டதில், அறிகுறிகளின் தீவிரம் குறையவில்லை. கூடுதலான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்துகள் கொடுப்பதில் இருந்து கடந்து செல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது என ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் நீல் ஸ்க்லூகர் கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் உதவக் கூடிய ஒரு மருந்தாக இது உள்ளது. இது வைரசை தடுக்க உதவுகிறது. இது ஆஸ்பத்திரியில் சேர்ப்பதை சராசரியாக 4 நாட்கள் குறைக்கிறது. கடுமையான கொரோனாவால் பாதிக்கப்படுகிறபோது இந்த மருந்தின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பது இனிதான் கண்டறியப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங்கின் பாக் கூறி உள்ளார்.
அரசின் தலைமையிலான ஆய்வு முடிவு வெளியாகவில்லை.

Related Tags :
Next Story