கொரோனா பாதிப்புக்கான் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?


கொரோனா பாதிப்புக்கான் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
x
தினத்தந்தி 2 April 2020 6:58 PM IST (Updated: 2 April 2020 6:58 PM IST)
t-max-icont-min-icon

பாதிப்புக்கான தடுப்பூசி தயாராகி விட்டதா எப்போது பய்னபாட்டுக்கு வரும் உலக சுகாதார அமைப்பின்சிறப்பு பிரதிநிதி தகவல்

லண்டன்

கொரோனா பாதிப்புக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில்  விஞ்ஞானிகள்ஈடுபட்டு உள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகளைப் கண்டு பிடிப்பதில் பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன 

சிஇபிஐ என்ற தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கான கூட்டணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு உலகளாவிய கூட்டாண்மை ஆகும், குறிப்பாக "வளர்ந்து வரும் தொற்று நோய்களுக்கு 

எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் மற்றும் பரவலின் போது மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவதை அனுமதிப்பதற்கும் உதவுகிறது.

அதாவது எதிர்காலத்தில் நமக்கு இன்னும் தெரியாத சில நோய்கள் இருக்கும், அதற்காக இன்னும் தடுப்பூசி இல்லை. 

விரைவான தடுப்பூசி வளர்ச்சிக்கு நோய்க்கிருமிகள் எதுவாக இருந்தாலும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப தளங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக சிஇபிஐ நிறுவப்பட்டது. இந்த தொழில்நுட்பங்கள் கிருமியை 

தனிமைப்படுத்தாமல் மரபணு வரிசையிலிருந்து தடுப்பூசிக்கு செல்ல நம்மை அனுமதிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வெளிவரும் என்பதை திட்டமிடுவது மிகவும் கடினம்.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டாக்டர் டேவிட் நபரோ கூறியதாவது:-

கொரோனா வைரஸின் மரபணுத் தொகுதி வரிசையை பயன்படுத்தி, வைரஸ்களை வளர்த்தெடுத்து அதன் இயக்கம், மனித செல்களில் எப்படி நுழைகிறது, நோயை எப்படி உருவாக்குகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். தடுப்பு மற்றும் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்க இந்த விவரங்களே முக்கியமானவை. முதன் முதலில் மரபணுத் 

தொகுதி வரிசைப்படுத்தப்பட்ட உடனேயே அமெரிக்காவில் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனை மார்ச் 16ஆம் தேதி தொடங்கியது. இதேபோல சீனாவிலும் முதல் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது.

முதல் கட்டத்தில் விலங்குகள் மீதும் மனிதர்கள் மீதும் சோதித்து பார்க்க வேண்டும், இரண்டாம் கட்டத்தில் தடுப்பு மருந்தின் திறன், பக்க விளைவுகள் குறித்து ஆராயப்பட வேண்டும். மருந்து வெற்றி எனில், அந்த தடுப்பூசியானது 

நோயை தடுக்கக் கூடியது என்பதோடு பாதுகாப்பானது என உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு உலக நாடுகள் உரிய விதிமுறைகளின் அடிப்படையில் தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்க வேண்டும்.எனவே, ஆய்வுக்கான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் ஒன்றிரண்டு மாதங்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என கருதக் கூடாது என்றும், குறைந்தது 18 மாதங்களாவது ஆகும் என்று 

தெரிவித்துள்ளார்.

Next Story