பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவு: 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்


பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவு: 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 March 2020 3:27 AM IST (Updated: 12 March 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.


* பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள அபோட்டாபாத் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ரஷிய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் புதின் மீண்டும் போட்டியிடுவதற்கு வழிவகுக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான தீர்மானம் அந்ந நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் வெற்றிகரமாக நிறைவேறியது.

* ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில இருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அதிவேகமாக சென்ற மினி பஸ்சும், மற்றொரு இலகு ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர்.

Next Story