ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேர் கடத்தல்: தலீபான்கள் அட்டூழியம்


ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேர் கடத்தல்: தலீபான்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 26 Dec 2019 1:13 AM IST (Updated: 26 Dec 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேரை தலீபான்கள் கடத்திச் சென்றனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில், மக்கள் அமைதி இயக்கம் என்ற அமைப்பு, கடந்த 20-ந் தேதியில் இருந்து அமைதிக்காக கிராமம்தோறும் பிரசாரம் செய்து வருகிறது.

நேற்று இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், பரா மாகாணத்தில் 6 வாகனங்களில் பிரசார பணியில் ஈடுபட்டிருந்தனர். பாலா பலுக் மாவட்டத்தில், அந்த வாகனங்களை தலீபான்கள் தடுத்து நிறுத்தினர். வாகனங்களில் இருந்த 26 பேரை தங்களது கார்களில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து, பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியை போலீசார் தொடங்கி உள்ளனர். ஆனால், அந்த பகுதியில் தொலைபேசி இணைப்பு செயலிழந்ததால், தகவல் பரிமாற்றத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பழங்குடியின தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story