கோத்தபய ராஜபக்சே திடீர் உத்தரவு: இலங்கை முழுவதும் ராணுவம் ரோந்து - தமிழர்கள் மத்தியில் கடும் பீதி
இலங்கை முழுவதும் ராணுவம் ரோந்து செல்வதற்கான அரசாணை ஒன்றை அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென பிறப்பித்து உள்ளார். இது தமிழர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பு,
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். இலங்கையில் வாழும் தமிழர்கள், இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரமேதாசாவையே ஆதரித்தனர். எனினும் பெருவாரியான சிங்களர்களின் ஆதரவுடன் கோத்தபய ராஜபக்சே வெற்றிவாகை சூடினார்.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற அவர், உடனடியாக தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். மேலும் முக்கிய அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது குடும்பத்தினரையே நியமித்தார். இதனால் இலங்கையின் அதிகார பீடம் ராஜபக்சே குடும்பத்தினர் கையில் சென்றுள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவுக்கும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனதற்கும் ராஜபக்சே குடும்பத்தினரே காரணமாக இருந்து வந்த நிலையில், இலங்கையின் அதிகாரம் மீண்டும் அவர்களது குடும்பத்திற்கே சென்றிருப்பதால் தமிழர்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.
அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதாவது நாட்டின் பொது அமைதியை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் ரோந்து செல்ல வேண்டும் என சிறப்பு அரசாணை ஒன்றை பிறப்பித்து உள்ளார்.
மேலும் கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும், நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் இந்த பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இலங்கையின் பொது பாதுகாப்பு அவசர சட்டப்பிரிவு 12-ன் கீழ் அதிபருக்கு வழக்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி இந்த சிறப்பு அரசாணையை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியிட்டு உள்ளார். இந்த அரசாணை நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்த ராணுவ ரோந்து இலங்கை முழுவதற்குமாக அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இலங்கை தமிழர்கள் அச்சம் வெளியிட்டு உள்ளனர்.
இறுதிப்போருக்குப்பின் தமிழர்கள் வாழும் பகுதிகளில் போடப்பட்டு இருந்த ராணுவ பாதுகாப்பு முற்றிலும் விலக்கப்படாத நிலையில், கோத்தபய ராஜபக்சேவின் இந்த உத்தரவு தமிழர்களுக்கு மேலும் பேரிடியாக அமைந்து உள்ளது. தங்கள் நிலப்பரப்புகள் அனைத்தும் மீண்டும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுமோ? என்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் வருகிற 27-ந்தேதி அனுசரிக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் ராணுவ ரோந்து உத்தரவை கோத்தபய ராஜபக்சே பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story