தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை
தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.
புதுடெல்லி,
தாய்லாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் டான் பிரமுத்வினை நேற்று இந்தியா வந்தார். அவர் இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இன்று காலை 10 மணிக்கு அவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச உள்ளார். அதன் பின்னர் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான எட்டாவது கூட்டு ஆணைய சந்திப்பில் கலந்து கொள்கிறார்.
அதனை தொடர்ந்து 12 மணியளவில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. டான் பிரமுத்வினை நாளை தாய்லாந்து திரும்புகிறார்.
கடந்த மாதம் இந்தியா மற்றும் தாய்லாந்து படைகள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இந்த பயிற்சியின் போது அவசர கால பாதுகாப்பு நடவடிக்கைகள், ஹெலிகாட்ரை கையாள்வது மற்றும் காடுகளிலும் நகரத்திலும் ஏற்படும் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Related Tags :
Next Story