எகிப்தில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொலை
எகிப்தின் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின் போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* எகிப்தின் சினாய் மாகாணத்தில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து, அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
* வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க ஏமனில் நடத்தும் வான்வழி தாக்குதலை சவுதி அரேபியா நிறுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
* அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பீடன் மீது நடவடிக்கை எடுக்க, உக்ரைன் அதிபருக்கு தான் நெருக்கடி அளித்ததாக புகார் கூறிய உளவுத்துறை அதிகாரியை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story