நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடிய புதிய பெண் சமூக ஆர்வலர்


நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடிய புதிய பெண் சமூக ஆர்வலர்
x
தினத்தந்தி 28 Sept 2019 3:49 PM IST (Updated: 28 Sept 2019 3:49 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானால் தேச விரோத குற்றச்சாட்டு கூறப்பட்ட பெண் சமூக ஆர்வலர் ஒருவர் நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நியூயார்க்,

பாகிஸ்தானில்  தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு  உள்ளான பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் குலலை இஸ்மாயில் அமெரிக்காவுக்கு தப்பி ஓடி வந்தார்.

நியூயார்க்கின் பரபரப்பான தெருக்களில் இஸ்மாயில் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களுக்காக குரல் கொடுத்தார்.  நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.

குலலை இஸ்மாயில் கூறியதாவது:-

பயங்கரவாதத்தை ஒழிக்கும் பெயரில் பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை  சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். 

பாகிஸ்தான் இராணுவத்தின் தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஆவேசமாக கூறினார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்திய குலலை இஸ்மாயில் மீது தடியடி நடத்தப்பட்டது. நாட்டின் பெண்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிரான தனது போராட்டத்தை தொடர்ந்து, அவர் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

இஸ்மாயில் பஷ்டூன் இன இயக்கத்தில் பங்கேற்றார். மன்சூர் பாஷ்டீன் தலைமையிலான இயக்கம் இப்போது பாகிஸ்தான் இராணுவத்திற்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது, இயக்கத்தை நசுக்குவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் தோல்வியுற்றது.

32 வயதான சமூக ஆர்வலர் கடந்த மாதம் அமெரிக்கா வந்தார். இஸ்மாயில்  தனது சகோதரியுடன் நியூயார்க்கில் புரூக்ளினில் தங்கியுள்ளார். அவர் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளார்.

அவர் அமெரிக்காவிற்கு தப்பி ஓடி வந்தாலும் பெற்றோர்களையும், தலைமறைவான நாட்களில் தனக்கு உதவியவர்களை பற்றியும்  கவலை கொண்டுள்ளார்.

இஸ்மாயில் கூறும்போது,

அமெரிக்காவில் பஷ்டூன்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் சரி செய்யப்பட வேண்டும். அங்கிருந்து, நான் சண்டையிடுவேன், பஷ்டூன்கள் போரில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.

தனக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட அப்பட்டமான முறைகேடுகளை சுட்டிக்காட்டுவதற்காக அவர் குறிவைக்கப்படுவதாகவும்  கூறினார்.

"அமெரிக்க வெளியுறவுத்துறை எனது குடும்பத்தினருடன் அமெரிக்காவை விட்டு வெளியேற என்னை கட்டாயப்படுத்தும் என்று பாகிஸ்தான் கருதுகிறது, ஆனால், நான் அமெரிக்காவில் எனது போராட்டத்தை தொடருவேன்" என்று இஸ்மாயில் கூறினார்.

Next Story