காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானில் இந்திய சினிமாவிற்கு தடை என தகவல்
பாகிஸ்தானில் இந்திய சினிமாவிற்கு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமாபாத்,
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கிறது. இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று பிரதமர் இம்ரான்கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாக மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்தும், இந்தியாவுடனான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், “பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அதேபோல நமது தூதர்கள் டெல்லியில் அதிக காலத்துக்கு இருக்க மாட்டார்கள். இந்திய அரசும் பாகிஸ்தானிடம் இந்தியாவுக்கு நியமிக்கப்பட்ட தூதரை அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவுடனான தூதரக உறவை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story