பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து; தெற்காசிய அமைதிக்கு இணைந்து பணியாற்ற விருப்பம்
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்ததுடன் தெற்காசிய அமைதிக்கு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள். தெற்காசியாவின் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் ஆகியவற்றிற்காக அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லியில் அமையும் அடுத்த அரசு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நட்புறவை தீர்மானிக்கும். அதனால் தேர்தல் முடிவுகள் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
Related Tags :
Next Story