ஏமன் துறைமுகத்தில் 10 சரக்கு கப்பல்கள் சிறைபிடிப்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிரடி
ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பு மன்சூர் ஹாதி படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015–ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
துபாய்,
ஏமன் நாட்டில் உள்ள ஹொடிடா துறைமுகத்தில் 10 சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் வந்து நின்றன. இந்த கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்க முடியாதபடிக்கு, அவற்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று அதிரடியாக சிறை பிடித்தனர்.இதை சவுதி அரசின் ‘அல் ஏக்பரியா’ செய்தி சேனல் தெரிவித்தது.
இதுபற்றி ஏமன் உள்ளாட்சி மற்றும் உயர் நிவாரண கமிட்டி மந்திரி அப்துல் சாரிக் பட்டா கூறுகையில், ‘‘ உணவுப்பொருட்கள் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் இறக்க இயலாத வகையில், கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்துள்ளனர். கடந்த மாதம் 28–ந் தேதி 10 ஆயிரத்து 955 டன் டீசல், 9 ஆயிரத்து 25 டன் பெட்ரோலுடன் வந்த கப்பலும் சிறை பிடிக்கப்பட்ட கப்பலில் அடங்கும். கடந்த 3–ந் தேதி வந்து சேர்ந்த சரக்கு கப்பலில் 5 ஆயிரத்து 700 டன் சர்க்கரையும், மாவும் இருக்கின்றன’’ என்று குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story