ஹிட்லர் என் தாயாருடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்து இருந்தார்- பிரபல நடிகை வேதனை
அடால்ப் ஹிட்லர் என் அம்மாவுடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என மறைந்த பிரபல நடிகை ரோமி ஸ்னைடர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வாதிகாரி ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக இருந்தவர் மெக்டா . அவர் கடந்த 1933-ம் ஆண்டு ஒரு படப்பிடிப்பின் போது வால்ஃப் ஆல்ப்-ரெட்டி என்ற நடிகரை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்டார். அடுத்த 4 வருடங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த் இருவருக்கும் பிறந்த ரோமி ஸ்னைடர் ஜெர்மனியின் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அவர் கடந்த 1976-ம் ஆண்டு, இறப்பதற்கு 5 வருடங்களுக்கு முன்னதாக, பத்திரிக்கையாளர் ஆலிஸ் ஸ்க்வார்சர் என்பவரிடம் ரகசியமான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த பேட்டி பற்றிய செய்திகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேட்டியில், பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும். தன்னுடைய தாய் மெக்டா, ஹிட்லருடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்திருந்ததை நினைத்து பெரும் வேதனை அடைந்துள்ளார்.
இது ஒரு புறமிருக்க தன்னுடைய தாயின் இரண்டாவது கணவர் ஹன்ஸ் ஹெர்பெர்ட் பிளட்ஹெய்ம் , அதிகமான முறை தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள முயன்றதாக கூறியுள்ளாராம். அந்த பேட்டியின் போது, ரோமி அடிக்கடி அழ ஆரம்பித்ததால் நிகழ்ச்சியில் அதிகமான கட் விழுந்ததாகவும் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
தன்னுடைய கருப்பு பக்கங்களை பற்றி மட்டுமே பேசியிருக்கும் ரோமி , எந்த நிலையிலும் நான் கூறியுள்ள ரகசியங்கள் வெளியில் தெரிந்துவிட கூடாது என என்னிடம் தெரிவித்திருந்தார்.நீண்ட வருடங்களாக ரோமியின் வார்த்தைக்காக தான் அவர் கூறிய ரகசியத்தை வெளியில் யாரிடமும் கூறாமல் பாதுகாத்து வந்தேன். ஆனால் அவருடைய கருப்பு பக்கங்கள் நிச்சயமாக பலருக்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது வெளியிட உள்ளேன் என பத்திரிக்கையாளர் ஆலிஸ் கூறியுள்ளார்.மேலும், வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி பிராங்கோ ஜெர்மன் டிவியில் காலை 10 மணிக்கு அந்த பேட்டி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story