உருக வைக்கும் சிரியா சிறுமியின் பாடல்
சிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவரின் பாடல் காட்சிகள், உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
டமாஸ்கஸ்
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர். இந்த மூன்று தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர்.
7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவர் குப்பை மேடாக காட்சியளிக்கும் சிரிய நகர வீதிகளில் பாடிக் கொண்டு வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆங்காங்கே மறைந்திருக்கும் சிரியா குழந்தைகள் தாங்களும் பாடிக் கொண்டே அந்தச் சிறுமியுடன் துணைக்கு வருவது போன்றும் யுனிசெப் சார்பில் அந்தப் பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்தப் பாடல் காட்சி மிக உருக்கமாகவும், சிரியாவின் தற்போதைய நிலையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. யூ டியூப் வீடியோவில் தற்போது டிரண்டிங்காக இந்தப் பாடல் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story