85,000 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் மனிதன் வசித்தான் ஆய்வில் தகவல்


85,000 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் மனிதன் வசித்தான்  ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 10 April 2018 3:53 PM IST (Updated: 10 April 2018 5:34 PM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதன் வசித்தான் என்பதை புதிய ஆய்வு ஒன்று வலியுறுத்துகிறது.


85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேபியன்ஸின் ஒரு விரல் எலும்பு  அல் நிபட் பாலைவனத்தில் அல் வுஸ்டா பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அல் வுஸ்டா படிவம்  90,000 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியாவை அடைந்தனர் என  நிரூபிக்கிறது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் நிபுணரான பேராசிரியர் மைக்கேல் பெட்ரக்லியா கூறி உள்ளார்.சுவாரஸ்யமாக, வுஸ்டாவில் 2 லடசம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் சில வெகுஜன இடம்பெயர்வுகளில் ஹோமோ சேபியர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஆப்பிரிக்காவுக்கு வெளியே 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் தொடர்ச்சியாக வசித்ததில்லை என்னும் முந்தைய வாதத்தை இந்த ஆய்வு பொய்யாக்குகிறது. அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. இப்போது அதுவும் கிடைத்துள்ளது.

Next Story