அமெரிக்கா என்னை அந்த நாட்டிற்குள் வர விடாமல் தடை செய்து விட்டது நமல் ராஜபக்சே ஆதங்கம்


அமெரிக்கா என்னை அந்த நாட்டிற்குள் வர விடாமல் தடை செய்து விட்டது நமல் ராஜபக்சே ஆதங்கம்
x
தினத்தந்தி 22 March 2018 4:04 PM IST (Updated: 22 March 2018 4:04 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை பாராளுமன்ற எம்.பி நமல் ராஜபக்சே அமெரிக்கா என்னை அந்த நாட்டிற்கு வர விடாமல் தடை செய்து விட்டது என டுவிட்டரில் கூறியுள்ளார். #NamalRajapaksa

கொழும்பு,

இலங்கை பாராளுமன்ற எம்.பி யும்,  இலங்கை முன்னாள் அதிபர் ராஜகபக்சே மகனுமான நமல் ராஜபக்சே ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலை பார்வையிட தனிப்பார்வையாளராக மாஸ்கோ சென்றார். 

அங்கு நடைபெற்ற 2 நாள் கூட்டங்களிலும் பங்கேற்றார்.  அப்போது மாஸ்கோவில் இருந்து அமெரிக்க செல்ல நமல் திட்டமிட்டிருந்தார். ஆனால் அமெரிக்கா வர அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் நமலுக்கு தடை விதித்தது.

இது குறித்து நமல் ராஜபக்சேவின் அலுவலகத்தினர் கூறுகையில், நமல் ராஜபக்சேவிற்கு  சரியான விசா இருந்தும் அமெரிக்காவிற்கு வர வேண்டாம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இது குறித்து மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் சரியான காரணம் ஏதும் அளிக்கவில்லை என கூறினர்.

அனுமதி மறத்தது குறித்து டுவிட்டர் பக்கத்தில் நமல் ராஜபக்சே கூறியிருப்பதாவது:

மாஸ்கோவில் உள்ள எமிரேட்ஸ் ஏர் விமான நிறுவனத்தினர் நான் ஹோஸ்டன் விமானத்தில் பயணிக்க முடியாது என கூறினர். ஏன் என்றால் எனக்கு அமெரிக்கா அனுமது மறுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எதற்காக எனக்கு அனுமதி மறுக்க வில்லை என்று இதுவரை அவர்கள் தெரிவிக்கவில்லை. 

அமெரிக்கா ஒரு இறையாண்மை நாடு. என்னுடைய பெயரில் எந்த அதிருப்தியும் அவர்களுக்கு இருக்காது. ஒரு வேளை அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நான் இலங்கையின் எதிர்க்கட்சி என்பதால் என்னாவா? அல்லது நான் ரஷ்யாவில் இருந்து வருகிறேன் என்று அவர்களுக்கு பிடிக்கவில்லையா? என நமல் ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.

Next Story