2017- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு


2017- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2017 10:13 AM (Updated: 2 Oct 2017 10:13 AM)
t-max-icont-min-icon

2017- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது

சுவீடன்

2017- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு குழு தலைவர் தாமஸ் பெர்ல் மேன் இதனை அறிவித்தார். 

மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு 3 பேர் கூட்டாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஜெப்ரி ஹால், மிக்கேல் ராஸ்பாஷ்,  மியாமியை சேர்ந்த மைக்கேல் யங்  ஆகியோருக்கு அறிவிக்கபட்டு உள்ளது.

சர்க்காடியன் கடிகாரம், நிச்சயமாக, நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ள உயிர் கடிகாரம்  பற்றிய கண்டு பிடிப்புக்காகவும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பரிசு பெறும் 3 பேருக்கும் ரூ.7 கோடி பரிசுதொகை  பகிர்ந்தளிக்கப்படும்.


Next Story