உலகை காப்பாற்றியவர் ரஷியாவில் மரணம்


உலகை காப்பாற்றியவர் ரஷியாவில் மரணம்
x
தினத்தந்தி 19 Sept 2017 6:20 PM IST (Updated: 19 Sept 2017 6:39 PM IST)
t-max-icont-min-icon

உலகை காப்பாற்றிய ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் ரஷியாவில் உயிரிழந்தார்.


மாஸ்கோ,


அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான பெரும் அணு ஆயுத போரை நிறுத்தி உலக அரங்கில் பெரும் பாராட்டை பெற்ற ரஷியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் (வயது 77) மரணம் அடைந்தார் என அவருடைய மகன் தெரிவித்து உள்ளார். 

"The Man Who Saved the World" என்ற ஆவணப்படத்தின் மூலம் அவருடைய அசாதாரண கதையானது தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் தன்னுடைய பாராட்டத்தக்க பணிக்காக பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கி உள்ளார். ஐ.நா.விலும் பாராட்டப்பட்டவர், கவுரவிக்கப்பட்டவர். ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் தன்னுடைய உறவினர்களுடன் வசித்து வந்து உள்ளார். கடந்த மே மாதம் மரணம் அடைந்தார். 

அவருடைய மரண செய்தியானது ரஷியா மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் சுமார் ஒரு மாதங்கள் கழித்து தலைப்பு செய்தியாகி உள்ளது. அவருடைய ஜெர்மனி நண்பர் இதுதொடர்பாக பிளாக்கில் எழுதியதை அடுத்து செய்தி வெளி உலகத்திற்கு தெரியவந்து உள்ளது.

தெற்கு மாஸ்கோவில் கடந்த 1983-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ராணுவ தளத்தில் ரேடார்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அமெரிக்கா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசியது என ரேடார் தரவுகள் சிக்னல் கொடுத்து உள்ளது. அப்போது சிறிது நேரங்களில் ஆழமாக யோசித்து முக்கியமான முடிவினை சொந்தமாக எடுத்தார், கிடைக்கப்பெற்ற தகவல்கள் அனைத்தும் தவறானது என்ற அறிக்கையை விடுவித்தார். 

ரஷியாவும், அமெரிக்காவும் மிகவும் ஆக்ரோஷமான மோதல் போக்கு கொண்டிருந்த நிலையில் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் மட்டும் ரஷிய அதிகாரியிடம் அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணை வீச்சு தொடர்பாக தகவல் தெரிவித்து இருந்தால் பெரும் பதிலடி தாக்குதலை ரஷியாவும் தொடங்கியிருக்கும். அவர் தகவலை மறைத்ததால் இருநாடுகள் இடையிலான அணு ஆயுத போரானது ஏற்படாமல் முடிந்தது. ரோடார் செயல்பாட்டில் தொடர்பு என்ற அவருடைய அறிக்கையானது பெரும் போரை நிறுத்தியது என அவருடைய செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்தது. 

அவருடைய செயல் சரியானதே என உலகம் முழுவதும் பாராட்டுக்கள் எழுந்த நிலையில் உள்ளூர் தலைமையங்களில் விமர்சனங்களும் எழுந்தது. தன்னுடைய நடவடிக்கையை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. 1984-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறி, மாஸ்கோவின் புறநகர் பகுதியில் வசிக்க தொடங்கினார். அவருடைய செயல் உலக அரங்கிற்கு தெரியவந்ததும் பல்வேறு பாராட்டு கடிதம் அவருடைய வீட்டை நிறைய செய்தது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து அவருக்கு அதிகமான கடிதங்கள் வந்தது என அவருடைய மகன் பீட்ரோவ் கூறிஉள்ளார். 

ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் பணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் "The Man Who Saved the World" கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. டேனிஷ் திரைப்பட தயாரிப்பாளர் பீட்டர் அந்தோனி இயக்கத்தில், அமெரிக்க நடிகர் கவின் காஸ்ட்னர் நடிப்பில் ஆவணப்படம் எடுக்கப்பட்டது.


Next Story