99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் நாசா பொதுமக்களுக்கு அறிவுரை


99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் நாசா பொதுமக்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 22 July 2017 5:25 PM IST (Updated: 22 July 2017 5:25 PM IST)
t-max-icont-min-icon

99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணத்தை பார்க்கும் பொதுமக்களுக்கு நாசா சில பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி உள்ளது.

நியூயார்க்,

99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் வரும்  ஆகஸ்ட் 21ஆம் தேதி  தோன்ற உள்ளது, இந்நிலையில் இது குறித்து பொதுமக்களுக்கு நாசா சில அறிவுரைகளை கூறியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

சூரிய கிரகணம் நிகழும் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும்.இதனை வெறும் கண்களால் பார்க்ககூடாது.    பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும். சூரியனின் மைய பகுதியை முழுமையாக நிலா மறைக்கிறது.  இந்த சூரிய கிரகணத்தை  உலகம் முழுவதும் உள்ள  30 கோடி மக்களால் இந்த  கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

Next Story