பிரான்ஸ் அதிபரை கொலை செய்ய சதி? வாலிபர் கைது


பிரான்ஸ் அதிபரை கொலை செய்ய சதி? வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 July 2017 10:30 PM (Updated: 4 July 2017 8:10 PM)
t-max-icont-min-icon

பிரான்சில் அதிபர் இமானுவல் மெக்ரானை படுகொலை செய்ய சதி திட்டம் திட்டியதாக 23 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பாரீஸ், 

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் தேதி ‘தேசிய தினம்’ கொண்டாடப்படுகிறது. தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகர் பாரீசில் சேம்ஸ்-எலைசீஸ் வீதியில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்தின் போது அந்நாட்டின் புதிய அதிபர் இமானுவல் மெக்ரன் முன்னிலையில் ராணுவ அணிவகுப்பு நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேசிய தின கொண்டாட்டத்தின் ராணுவ அணிவகுப்பின் போது அதிபர் இமானுவல் மெக்ரானை படுகொலை செய்ய சதி திட்டம் திட்டியதாக 23 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வாலிபர் பாரீசின் புறநகர் பகுதியான ஆர்ஜென்தெய் நகரை சேர்ந்தவர் என்பதை தவிர போலீசார் வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. அந்த வாலிபர் அதிபரை கொலை செய்ய என்ன சதி திட்டம் தீட்டினார்? அவர் எப்படி போலீசாரிடம் சிக்கினார்? என்ற தகல்களும் வெளியாகவில்லை. 

Next Story