பர்கினோ பசோவில் பயங்கரவாத தாக்குதல்: 200 பேர் பலி


பர்கினோ பசோவில் பயங்கரவாத தாக்குதல்: 200 பேர் பலி
x

பர்கினோ பசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர்.

ஒவ்கடங்கு,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பர்கினோ பசோவின் பர்சலொகொ மாகாணம் கயன் நகருக்குள் நேற்று முன் தினம் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர். மேலும், 140 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


Next Story