ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது


ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது
x
தினத்தந்தி 10 Aug 2023 8:14 AM IST (Updated: 10 Aug 2023 12:23 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சான்டியாகோ,

சீனாவை சேர்ந்தவர் ஜிஞ்சாவோ வெய். 22 வயதான இவர் அமெரிக்க கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். லாஸ் ஏஞ்சல்சின் வென்சுரா கடற்படை தளத்தில் பணி புரிந்து வந்தவர் வென்ஹெங் ஜாவோ (26). இருவரும் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், போர் கால பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் நவீன தளவாடங்கள் குறித்து சீனாவுக்கு உளவு சொன்னதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து இருவரையும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து சான்டியாகோவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. அதில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் 2 மாலுமிகளும் சீனாவுக்கு உளவு சொன்னதாக வாதாடினார். சீனாவில் உள்ள தனது தாயை கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெய் சந்தித்ததாகவும் அங்கே வைத்து சீன அதிகாரிகளை அவர் சந்திந்திருக்கலாம் என்று கூறினார்.

மேலும் பணி ஓய்வுக்கு பின்னர் சீன அரசின் சலுகைகளை பெறவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவரின் அனைத்து செலவுகளையும் சீன அதிகாரிகள் ஏற்றதாகவும் அவர் வாதிட்டார். இதற்கு அவருடைய தாயும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்றார். கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் நிரபராதிகள் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story