டெல்லியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் தரையிறங்கிய விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டது...!


டெல்லியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் தரையிறங்கிய விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டது...!
x

டெல்லியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் தரையிறங்கிய விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டு சென்றது.

கராச்சி,

டெல்லியில் இருந்து இன்று காலை 138 பயணிகளுடன் துபாய் நோக்கி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பெயிங் 737 மெக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுப்ட கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, காலை 9.15 மணியளவில் விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் விமான நிலையத்தில் இந்திய விமானம் தரையிரக்கப்பட்டு அதில் இருந்த பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாற்று விமானம் மும்பையில் இருந்து பாகிஸ்தானுக்கு புறப்பட்டது. அந்த விமானம் காராச்சி விமான நிலையம் சென்றடைந்தது.

இந்நிலையில், 11 மணி நேரமாக பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் டெல்லியில் இருந்து வந்த மாற்று விமானத்தில் துபாய் புறப்பட்டனர். கராச்சி விமான நிலையத்தில் காத்திருந்த 138 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு ஸ்பைஸ் ஜெட் மாற்று விமானம் துபாய் புறப்பட்டு சென்றது.


Next Story