உக்ரைனில் இருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் - தகவல்


உக்ரைனில் இருந்து  68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் - தகவல்
x

உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீவ்,

ரஷிய தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர். பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர். இது தவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.

போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10% அதிகரித்துவிட்டது.

ரஷியா தாக்குதல் காரணமாக உக்ரைனிலிருந்து மொத்தம் 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story